தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைக்கு காரணம்! வெளிப்படுத்தினார் சம்பந்தன்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக போராளிகள் அமைப்பினர் இன்றைய தினம் சம்பந்தனை திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பு முடிவடைந்ததன் பின்னர் இது தொடர்பில் சம்பந்தன் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போதே குறித்த விடயத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இன்றைய தினம் இடம்பெற்ற ஜனநாயக போராளிகள் அமைப்பினருடனான சந்திப்பின் போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடியிருந்தோம்.

இதன்போது எதிர்பார்த்த ஆசன எண்ணிக்கையிலும் பார்க்க குறைந்த ஆசனங்கள் பெறப்பட்டதற்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம்.

அத்துடன் பலர் பல வகைகளில் மக்களது வாக்குப் பலத்தினை சிதறடித்ததன் காரணமாக நாம் இப்போது இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.