ரணில் தொடர்ந்தும் தலைமைப் பதவியில் நீடிக்கும் சாத்தியம்?

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள் தென்படுவதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படும் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

எனினும், கட்சியின் தலைவர் ரணில் இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் உடனடியாக தலைமைப் பதவியிலிருந்து நீங்கப் போவதில்லை என்ற அர்த்தத்தில் ரணில் கருத்து தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமை தேவைப்படுவதாகவும், இது குறித்து கட்சியின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த அறிக்கை மூலம் கட்சித் தலைமைப் பதவியில் சில காலத்திற்கேனும் அவர் தொடர்ந்தும் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.