அங்கஜனின் வெற்றி - யாழ் மக்களுக்கு நன்றி தெரிவித்த மைத்திரி

Report Print Tamilini in அரசியல்

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக கை சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு யாழ் மக்கள் பெற்றுக்கொடுத்த மிகச் சிறந்த வெற்றிக்காக யாழ் மாவட்ட மக்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் எனதும் கெளரவத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்தோடு இந்த வெற்றியானது இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத் தேர்தலில் பெற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு வெற்றியாகும் என்பதையும் மிகுந்த அபிமானத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் என அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட நிலையில், அங்கு அங்கஜன் ராமநாதன் 36,365 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவதாக வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.