ஒதுக்கப்பட்ட ராஜாங்க அமைச்சு பதவியை ஏற்காத விஜயதாச ராஜபக்ச?

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ராஜாங்க அமைச்சு பதவி ஒன்று ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அந்த பதவியை ஏற்கவில்லை என சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு பதவி அவருக்கு வழங்கப்படவிருந்தது.

இந்த நிலைமையில், கண்டி தலதா மாளிகையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்விலும் விஜயதாச ராஜபக்ச கலந்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

விஜயதாச ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை எதிர்பார்த்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.