புதுச் சட்டங்களை உருவாக்கும் புதிய நீதியமைச்சர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எனது அனுபவத்தைக் கொண்டு நாட்டுக்குத் தேவையான புதிய சட்டங்களை உருவாக்க என்னால் முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நீதியமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணியாக நான் 25 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளேன். என்னால் அந்த அனுபவம் மற்றும் தொடர்புகளைக் கொண்டு நாட்டின் பழைமைவாய்ந்த சட்டங்களை மாற்றி அமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்துறையில் உட்கட்டமைப்பு வசதிகள், காலாவதியான சட்டம், நாட்டுக்கு தேவையான புதிய சட்டம் உருவாக்கல் என்பவற்றை செய்ய முடியும் எனவும் நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.