புதனன்று கோட்டாபய தலைமையில் புதிய அமைச்சரவையின் கூட்டம்

Report Print Rakesh in அரசியல்

புதிய அமைச்சரவை எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் கூடவுள்ளது.

இக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையின் கீழ் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு, சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இடம்பெறவுள்ளது. இம்முறை பார்வையிட வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான நெருங்கிய நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.