அமைச்சர்களை காட்டிலும் அதிக அதிகாரமுடைய உயர் பதவி மைத்திரிக்கு

Report Print Ajith Ajith in அரசியல்

அரசியலமைப்பு மாற்றப்பட்ட பின்னர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவி அமைச்சரவை அமைச்சர்களின் அதிகாரங்களை காட்டிலும் அதிகாரம் உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்ற போது அந்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற போதும் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை.

மைத்திரிபால கடந்த பொதுதேர்தலில் பொலன்னறுவையில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது