ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை கையளித்தார். இதில் ரஞ்சித் மத்தும பண்டார, எரான் விக்ரமரத்ன, மயந்த திசாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, இம்தியாஸ் பாகிர் மாக்கார் மற்றும் தயானி கமகே ஆகியோர் அடங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் தமக்கும் இடம் வேண்டும் என பங்காளி கட்சிகளான தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்பன கோரிக்கை விடுத்திருந்தபோதும் பின்னர் இணக்க அடிப்படையில் அந்த கோரிக்கையை கட்சிகள் விலக்கிக்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.