தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் விலக்கப்படுவார்! செல்வம் எம்.பி

Report Print Gokulan Gokulan in அரசியல்

சுமந்திரனை கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பதவியில் இருந்து எடுத்திருந்தால் இப்படி ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

என்னைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதே தவிர அவர்களால் சாதிக்க முடியாது என்று ஒன்று இல்லை.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் இந்த சுமைகள் சுமத்தப்பட்டன.

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும்போது நான் இருந்தேன். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய சவால்களை எதிர்கொள்ளும். கூட்டமைப்பின் பலவீனம் என்ன? கூட்டமைப்பை யார் யார் உடைக்கின்ற விடயங்களை முன்னெடுக்கின்றார்கள் என எனக்குச் சொல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.