இலங்கையின் பொதுத்தேர்தல் வரலாற்றில் முக்கிய நிகழ்வு: நிகழுமா? நிகழாதா?

Report Print Ajith Ajith in அரசியல்
109Shares

மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தால் இலங்கையில் தேர்தல் வரலாற்றில் புதிய அம்சம் ஒன்று நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேம்லால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் போது அடுத்து தெரிவு செய்யப்படவுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக குலுக்கள் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைக்காக பிரேம்லால், 2020 ஜூலை மாதத்தில் மரண தண்டனையை தீர்ப்பை பெற்றார். எனினும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் வெற்றிபெற்றார்.

இதனையடுத்து வாக்காளர்களின் உரிமைகளை மீறாத வகையில் பிரேம்லால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கவேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் சட்டமா அதிபர் , பிரேம்லால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என்று நிலைப்பாட்டில் உள்ளார்.

இந்நிலையில் பிரேம்லாலுக்கு வாய்ப்பு கிடைக்காது போனால் அடுத்து வரும் அதிக விருப்பு வாக்கை பெற்றவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட வேண்டும்.

எனினும் பிரேம்லாலுக்கு பின்னர் வந்த பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் ஒரேஅளவான விருப்புத்தெரிவு பெற்றுள்ளனர்.

சொனி ரோஹன கொடித்துவக்கு மற்றும் ரஞ்சித் பண்டார ஆகியோரே இந்த விருப்புத்தெரிவு வாக்குகளை பெற்றவர்களாவர்.

எனவே இவர்களில் ஒருவரை தெரிவு செய்ய குலுக்கள் முறையை பயன்படுத்தவுள்ளதாக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.