ருவானை ஐ.தே.கட்சியின் தலைவராக நியமித்தால் எனக்கு தேசிய பட்டியல் எம்.பி பதவியை வழங்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்
173Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் ருவான் விஜேவர்தனவுக்கு வழங்கப்படுமாயின் தனக்கு கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவசியம் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அகில விராஜ் காரியவசம் இது சம்பந்தமாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.

19 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ போட்டியில் இருந்து விலகி இருக்கின்றார்.

தனது பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்குமாறு அகில விராஜ், ரணில் விக்ரமசிங்கவை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனக்கு அறிவிக்காது தேசிய பட்டியல் ஊடாக எவரையும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ததாக அறிவிக்க வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அரசியல் மற்றும் சில உணர்வுபூர்வமான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கும் அகில விராஜ் காரியவசத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.