உண்மையையும், ஜனநாயகத்தையும் மூடி மறைக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வருமான சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சாதாரணமாக உலக அரசியலில்,கொள்கைக்காக உயிரை தியாகம் செய்து போராடும் மனிதர்களுக்கு என்றும் தவறுவதில்லை. அவர்களின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை காலம் வெற்றியை நோக்கி கொண்டு செல்லும்
நாடாளுமன்றத்தில் தற்போது இருப்பதை விட 161 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்துடன் எவராலும் தோற்கடிக்க முடியாது எனக் கூறி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து மெதமுலன வீட்டில் வாசற்கதவில் தொங்கி கொண்டு பேசும் நிலைமைக்கு கொண்டு சென்றோம்.
அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என 589 பேரை மகிந்த ராஜபக்சவிடம் இருந்து பிரித்தெடுத்தோம்.
அதேவிதமாக தற்போது நாட்டை ஆட்சி செய்யும் சர்வாதிகாரியையும் வீட்டுக்கு அனுப்புவோம் என சத்துர சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.