நாட்டு மக்களிடம் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்
884Shares

தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு தன்னை அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

மக்களின் நன்மை கருதி அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு கீழ் மட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ பணிகளில் முதன்மைத்துவம் வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக காலத்தை செலவிடுவதற்கு மேலதிகமாக நிகழ்வுகள், பரிசளிப்பு, திருமணம் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்பதனால் அவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு ஜனாதிபதியை அழைக்க வேண்டாம் என அனைவரிடமும் தயவாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான மரியாதை காரணமாக பலர் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கின்றனர். மக்கள் தன் மீது கொண்டு பிணைப்பை அவர் மிகவும் பெரிதாக மதிக்கின்றார்.

எப்படியிருப்பினும் உத்தியோகபூர்வ கடமைகளை தாண்டி தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு மணித்தியாலங்களையும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அர்ப்பனிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.