ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

Report Print Steephen Steephen in அரசியல்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களை தடுத்து வைக்கும் இடமாக தங்காலையில் உள்ள பழைய சிறைச்சாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

1979 இலக்கம் 48 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக) ஏற்பாடுகள் சட்டத்தின் 9ஆவது ஷரத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை - தங்காலை பிரதேசத்தில் உள்ள மெதமுலன என்ற பகுதியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பூர்வீக இல்லம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.