அரசசார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் நேரடியாக தலையிட்டுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய சட்ட வரைவை உருவாக்க அரசாங்கம் கலாநிதி சுசந்த குணதிலக்கவை நியமித்துள்ளது.

இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வருடாந்தம் 36 பில்லியன் நிதி கிடைப்பதாகவும் அவற்றை வழங்கும் நாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாவதில்லை எனக் கூறப்படுகிறது.

இலங்கை ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த அரசசார்பற்ற நிறுவனங்களில் சில நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுடன் சம்பந்தப்பட்டவை. இந்த நிறுவனங்கள் அரசாங்கங்களை கவிழ்க்கவும் தலையீடுகளை செய்திருந்தாக தற்போதைய அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசசார்பற்ற நிறுவனங்கள் சம்பந்தமாக இந்தியா நிறைவேற்றியுள்ள சட்டத்திற்கு நிகரான சட்டத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த சட்டவரைவு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.