இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் ரவீந்திர டயஸிடம் மன்னிப்பு கோரிய யஸ்மின் சூக்கா

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை புலனாய்வு சேவையின் தற்போதைய இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தொடர்பான செய்திக்கு தவறான புகைப்படத்தை சித்தரித்தமைக்காக இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் ரவீந்திர டயஸிடம் யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மன்னிப்பு கோரியுள்ளது.

பிரிகேடியர் ரவீந்திர டயஸ் தனது சட்டத்தரணி நிலங்க பெரேரா மூலம் அனுப்பிய கோரிக்கைக் கடிதத்தை அடுத்தே யஸ்மின் சூகா மற்றும் அவருடைய அமைப்பு மன்னிப்பை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சாலியின் படத்துக்காக தமது படத்தை பிரசுரித்தமையால் தமது வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக ரவீந்திர டயஸ் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையிலேயே புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக யஸ்மின் சூக்கா, பிரிகேடியர் ரவீந்திர டயஸிடம் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்து குற்றச்சாட்டு செய்தி தொடர்பில் சுரேஷ் ஷாலியும் யஸ்மின்சூக்காவிடம் நட்டஈட்டை கோரியுள்யுள்ளமை குறிப்பிடத்தக்கது.