அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக ரவிநாத ஆரியசிங்க நியமனம்

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரியசிங்கவை பிரான்ஸ் நாட்டுக்கான தூதுவராக நியமிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் தற்போது அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடமையாற்றிய ரொட்னி பெர்னாண்டோ இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை,நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்து வரும் பிரான்ஸ் நாட்டுக்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் க்ஷனிகா ஹிரிம்புரேகம நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தராகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர இத்தாலி, தென் கொரியா, சீசெல்ஸ், ஈரான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான தூதுவர் பதவிகள் வெற்றிடமாக இருந்து வருகின்றன. அந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அத்மிரல் ஜயநாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.