எம்.சீ.சீ உடன்படிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா..? வொஷிங்டனில் கூடும் பணிப்பாளர் சபை

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க எம்.சீ.சீ உடன்படிக்கை திட்டத்தின் பணிப்பாளர் சபை அடுத்த வாரம் வொஷிங்டனில் கூடவுள்ளது.

அமெரிக்காவின் எம்.சீ.சீ. திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் அபிவிருத்திக்காக நிதியுதவியை வழங்கி வருவதுடன் இலங்கைக்கு 480 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கையிடம் அந்த உடன்படிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த உடன்படிக்கையில் காணப்படும் பல்வேறு விடயங்கள் மற்றும் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் சம்பந்தமாக சமூகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.

பின்னர் இந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்பட்ட நிபுணர்கள் குழு, உடன்படிக்கையின் சில நிபந்தனைகள் நாட்டின் பொது சட்டத்திற்கு மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என கூறியது. இதனையடுத்து உடன்படிக்கை தொடர்பான செயற்பாடுகள் செயலிழந்தன.

அமெரிக்கா தெற்காசியாவில் இலங்கையை தவிர நேபாளத்திற்குத் இவ்வாறு உடன்படிக்கையை முன்வைத்துள்ளதுடன் அதற்கு இதுவரை நேபாள நாடாளுமன்றம் அனுமதி வழங்கவில்லை.