மாகாண சபை முறை ஒழிப்பு - சரத் வீரசேகரவுக்கு எதிராக பொதுஜன பெரமுனவுக்குள் வலுக்கும் எதிர்ப்பு..

Report Print Steephen Steephen in அரசியல்
240Shares

மாகாண சபைகள் முறையை ஒழிக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்து சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சரத் வீரசேகர தனது தனிப்பட்ட பிரபலத்திற்காக கட்சி, அரசாங்கம் மற்றும் நாட்டை அசௌகரியத்திற்கு உள்ளாகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினரான முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் மஹேஷ் அல்மேதா, மகிந்த ராஜபக்சவே வடக்கு மாகாண சபையை ஏற்படுத்தி போரில் ஈடுபட்ட இளைஞர்கள் அரசியல் அதிகாரத்தை வசிக்கக் கூடிய உரிமையை பெற்றுக்கொடுத்தார்.

இந்தியாவை கவனத்தில் கொள்ளாது இதனை ஒழிக்க முடியாது. இதனால், சூடாக ரொட்டியை சாப்பிட போய், தனியாக அடிவாங்கும் வேலையை நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டாம் என நாங்கள் சரத் வீரசேகரவிடம் மீண்டும் கூறி வைக்க விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.