மகிந்தவின் அரசியல் ஞானம் கோட்டாபாயவிடம் இல்லை - மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்
207Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் நிர்வாக அதிகாரி என்ற வகையில் திறமையானவர் என்றாலும் அரசியல் ரீதியான அனுபவம் அவருக்கு குறைவு என சிங்களே அமைப்பின் தலைவர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பஞ்ஞாலோக்க தேரர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கும் அனுபவ ரீதியான அரசியல் ஞானம் கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லை.

தேசிய அமைப்புகளை ஒரு புறம் ஒதுக்கி தள்ளி விட்டு வியத் மக போன்ற தனக்கு நெருக்கமானவர்களுடன் செல்லும் பயணம் சிறந்த பயணமாக இருக்காது. இப்படியான பயணத்தை ஜனாதிபதி முன்னெடுக்க மாட்டார் என நம்புகிறோம்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மகிந்த ராஜபக்சவின் நிழல் இன்றி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெற்றிகரமான அரசியல் பயணம் இல்லை எனவும் பஞ்ஞாலோக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.