ஐ.தே.க. தலைமையை ஏற்க மங்கள தயாரா? ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அவர் பதில்

Report Print Rakesh in அரசியல்
101Shares

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு யாராவது கேட்டால் இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றே நான் பதிலளிப்பேன் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

தான் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்றும், இது எதிர்காலத்திலும் மாறாமல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்ததால்தான் ஐக்கிய மக்கள் சத்தியிலிருந்து விலகினேன். ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த தலைவர் என்றாலும், அவர் இலங்கைக்குக் கிடைக்காத சிறந்த தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.