இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகரை கைது செய்யுமாறு கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்
124Shares

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஸ்வர்ன போதொட்டவை கைது செய்யுமாறு புலம்பெயர் தமிழர்கள், லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவகத்திற்கு எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் எதிர்ப்பை வெளியிடும் வாசகங்கள் எழுதிய தட்டிகளை ஏந்தியிருந்தனர்.

தமது இந்த கோரிக்கை சம்பந்தமாக இவர்கள் அண்மையில் பிரித்தானிய வெளிவிவகார செயலாளருக்கு கூட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்ததுடன் அதற்கு பதில் கிடைக்காத நிலையில் நேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் பிரிகேடியர் ஸ்வர்ன போதொட்டவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முடிவடைய உள்ளது. இதன் பின்னர் அவர் இலங்கை திரும்ப உள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே புலம்பெயர் தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.