தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்களின் சந்திப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு கட்சியின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான மணிவண்ணனின் ஏற்பாட்டில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் தொடர்ந்தும் மணிவண்ணனுடன் இணைந்து பயணிப்பதற்கு தமது பூரண ஆதரவை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு என்று ஒரு சட்டவாளர் அணி ஒன்று அமைக்கப்படுவது பற்றியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சினைகளை கையாள்வதற்கு ஓர் சட்டவாளர் அணியை உருவாக்குவதற்கும், அதில் இணைந்து பயணிப்பதற்கும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ், மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.