மீண்டும் அமைச்சரவையில் மாற்றம்! - எதிர்க்கட்சியினர் பலருக்கு அமைச்சுப் பதவி

Report Print Vethu Vethu in அரசியல்
1290Shares

அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர் அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை திருத்தம் மூலம் 20ஆம் அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

அரசியலமைப்பு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை அமைச்சு பதவிகள் 30 க்குள் மட்டுப்படுத்தும் பிரிவு நீக்கப்படும்.

அதன் பின்னர் ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய விரும்பிய எண்ணிக்கையிலான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமித்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.