ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றிடமாக காணப்படும் அனைத்து பதவிகளுக்கமான நபர்களை அடுத்த மூன்று மாதங்களுக்கு செல்லுப்படியாகும் வகையில் வாக்கெடுப்பின் தேர்தெடுக்க அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளைய தினம் முற்பகல் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.
இந்த செயற்குழுக்கூட்டத்தில் பிரதித் தலைவர், பொருளாளர் உட்பட சில பதவிகளுக்கு பொருத்தமான நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு ருவான் விஜேவர்தன மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் போட்டியிட உள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேவை ஏற்பட்டால் மாத்திரம் வாக்கெடுப்பை நடத்துவது என கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்கள்,ஊடக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், நிபுணர்கள் அமைப்பு உட்பட அனைத்து அமைப்புகளை துரிதமாக கட்டியெழுப்பு பொறுப்பு தெரிவு செய்யப்பட உள்ள பிரதித் தலைவருக்கு வழங்கப்பட உள்ளது.
வெற்றிடமாக இருக்கும் பதவிகளுக்கு தெரிவு செய்யப்படும் நபர்கள் டிசம்பர் மாதம் இறுதி வரை அந்த பதவிகளில் கடமையாற்றுவார்கள். பிரதித் தலைவராக தெரிவு செய்யப்படும் நபர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கட்சியின் தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.