20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ள 15க்கும் மேற்பட்ட எதிரணி உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்
65Shares

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது சம்பந்தமாக ஆதரவளிக்க எதிர்க்கட்சியில் உள்ள 15க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் வாராந்த செய்தித்தாள் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியை சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமற்ற மட்ட சந்திப்புகளில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக எதிர்க்கட்சியை சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக சில சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மக்கள் மிகப் பெரிய ஆணையை வழங்கியுள்ளதால், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற இணக்கப்பாட்டுக்கு இவர்கள் வந்துள்ளனர்.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் இதில் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.