லக்ஷ்மன் கிரியெல்லவின் புதல்விக்கு எதிராக வழக்கு

Report Print Steephen Steephen in அரசியல்
416Shares

மத்திய சுற்றாடல் அதிகார சபை, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் புதல்வி ஷமி கிரியெல்ல ஹேரத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ஹந்தானை பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் காடுகளை அழித்து தரை மட்டமாகியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஹந்தானையில் உள்ள குறித்த காணி தனது பரம்பரை சொத்து என லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியில் அந்த காணி அமைந்துள்ளதாக அதில் இருந்த மரங்களை வெட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.