சமய வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் போது தெளிவான காணி உறுதிகள் இருக்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்
104Shares

விகாரை, கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களை நிர்மாணிக்கும் போது அந்த இடத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் தெளிவான காணி உறுதி மற்றும் காணி அமைந்துள்ள பிரதேசத்தில் மக்கள் செறிவின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரிவுகள் குறித்த கண்காணிப்பு தெரிவுக்குழு யோசனை முன்வைத்துள்ளது.

அந்த காணி உறுதியானது அன்பளிப்பு செய்யப்பட்ட உறுதியாக அல்லது அனைவரும் பொதுவாக வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் உருவாக்கப்பட்ட காணி உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அந்த தெரிவுக்கு கூறியுள்ளது.

கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படும் போது அந்த பகுதிக்கு சொந்தமான உள்ளூராட்சி அதிகாரத்திற்கு உட்பட சட்டத்திட்டங்களுக்கு அமைய நிர்மாணிக்க வேண்டியது கட்டாயம்.

சமயம் சார்ந்த நிலையங்களில் உரிய பொறுப்பாளர் அல்லது பொறுப்பாளர் சபை இருக்க வேண்டும் என்பதுடன் சமய நிலையங்கள் பொது சுகாதார வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.