20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் சில யோசனை முன்வைத்துள்ளன.
இந்த திருத்தங்கள் உள்ளடக்கப்படாது போனால், அந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரளிப்பது குறித்து மறு ஆய்வு செய்ய நேரிடும் என கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வாராந்த செய்தித்தாள் ஒன்றிடம் கூறியுள்ளனர்.
அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 ஆக வரையறுத்தல், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதை தடுத்தல், தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் ஆகிய ஷரத்துக்கள் மீண்டும் 20வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என இந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.