ராஜபக்ச அரசுக்கு எதிராக களமிறங்கும் சந்திரிகா

Report Print Ajith Ajith in அரசியல்

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த ஆர்ப்பாட்டங்களின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அவர் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

அவரது தலைமையின் கீழ் உருவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பில் ஈடுபட்டு வந்த சந்திரிகா தற்போது எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டங்களில் களமிறங்கவுள்ளார்.

அவர் விரைவில் பொது மேடைகளில் ஏறவுள்ளார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.