தமிழரசு கட்சியின் புதிய இளைஞரணி தெரிவு

Report Print Theesan in அரசியல்
162Shares

வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞரணி தெரிவு கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

அதன்படி இளைஞரணியின் புதிய தலைவராக சி.சிவதர்சனும், செயலாளராக அ.அன்ரணி றெக்சனும், பொருளாலராக ச.பத்மசீலனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை உபதலைவராக சி.வினோத், உபசெயலாளராக கு.ரஞ்சித், பிரதித்தலைவர்களாக, நவநீதன், இந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞரணியின் அமைப்பாளராக சஜீவனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதனைவிட பிரதேச அமைப்பாளர்கள் நான்கு பேரும் நிர்வாக சபை உறுப்பினர்கள் 10 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.