20ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைச்சரவைக்கு தெரியாமலேயே தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த திருத்தத்தை மீண்டும் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைத்துள்ள குழு தொடர்பில் கருத்துரைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் குறித்த 20வது திருத்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக எரான் விக்கிரமரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
20வது திருத்தம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் எழுந்தநிலையில் அது தொடர்பில் ஆராய பிரதமர் நேற்று அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் குழு ஒன்றை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.