ஹிஸ்புல்லா தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்:எடிசன் குணசேகர

Report Print Steephen Steephen in அரசியல்
1651Shares

எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணத்தில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக அந்த மாகாணத்தின் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் எடிசன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஹிஸ்புல்லாவுக்கு இருந்த அரச பலம் காரணமாக அவரது இந்த செயற்பாடுகள் சம்பந்தமாக முறைப்பாடு செய்ய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சாதாரண மக்கள் அஞ்சினர்.

கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வந்த அடிப்படைவாத அமைப்புகளின் உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, ஹிஸ்புல்லா, அதாவுல்லா, அமீர் அலி, பதியூதீன் போன்ற பிரபல அரசியல் தலைவர்கள் அதனை எதிர்த்தனர்.

ஆரம்பத்தில் இந்த அடிப்படைவாத முஸ்லிம் குழுக்கள் ஆயுதங்களுடன் அடிப்படைவாதத்தை பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுத்தன. பின்னர் கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிராக சாதாரண மக்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் முறைப்பாடு செய்ய அஞ்சினர் எனவும் எடிசன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.


You may like this video...