பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை ஒழிக்க புலனாய்வுப் பிரிவினரின் தலையீடு

Report Print Steephen Steephen in அரசியல்
114Shares

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை முற்றாக ஒழிக்கும் நோக்கில் இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகளின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பகிடிவதைகள் காரணமாக வருடத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவ, மாணவிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்திற்கு வருவதை தவிர்த்து விடுகின்றனர்.

பகிடிவதையை காரணமாக கொண்டு தற்கொலைகள் மாத்திரமல்ல பாரதூரமான பல விபத்துக்களை மாணவர்கள் எதிர்நோக்கிய சம்பவங்கள் பல்கலைக்கழங்களில் நடந்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிகளுடன் சம்பந்தப்பட்ட மாணவர் அமைப்புகள் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.