20வது திருத்தச்சட்ட வரைவு தனி நபர் உருவாக்கியது அல்ல! ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in அரசியல்
82Shares

அரசாங்கம் கூட்டாக இணைந்தே 20வது அரசியலமைப்புச் சட்ட வரைவை உருவாக்கியதாகவும் அது தனி நபர் உருவாக்கிய சட்ட வரைவு அல்ல எனவும் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புச் சட்ட வரைவை தனி நபர் உருவாக்கினார் என்று கூறுவது பொருத்தமற்றது. நாட்டில் நடைமுறையில் இருந்த எந்த அரசியலமைப்புச் சட்டத்தையும் தனி நபர் உருவாக்கினார் என நான் நம்ப மாட்டேன்.

அதேபோல் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களையும் தனி நபர் உருவாக்குவதில்லை. அது கூட்டு செயற்பாடு. தனி நபரால் அதனை செய்ய முடியாது. அது தனி நபர் செய்யும் வேலையும் அல்ல.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தனியாக உருவாக்கிய சட்டமல்ல.

தற்போதைய அரசாங்கத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க மக்கள் ஆணை வழங்கியுள்ள நிலையில் அந்த செயற்பாடு புதிராக இருக்காது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றி தாம் அறிந்திருக்கவில்லை என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.