இரட்டை குடியுரிமை கொண்டவர் இல்லாமல் போயிருந்தால் இலங்கை இரண்டு நாடுகளாக பிளவுப்பட்டிருக்கும்

Report Print Steephen Steephen in அரசியல்
1213Shares

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் இல்லாமல் போயிருந்தால், இலங்கை தற்போது இரண்டு நாடுகளாக பிளவுப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசகரும் இலங்கை பத்திரிகை சபையின் தலைவருமான கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இல்லை என்றால், தற்போது இலங்கை இரண்டு நாடுகளாக மாறியிருக்கும். முழுமையான இலங்கை குடியுரிமை கொண்ட இலங்கையர்களே நாட்டை அழித்தனர்.

யுத்தத்தை வழி நடத்திய கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமை கொண்டவர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வசதிகளை வழங்கி, சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொடுத்த பசில் ராஜபக்சவும் இரட்டை குடியுரிமை கொண்டவர்.

பசில் ராஜபக்ச மிகவும் பாடுபட்டு பெற்றுக்கொடுத்த வெற்றிக்கான பிறப்பத்தாட்சி பத்திரத்தை எழுதிக்கொள்ள அவசரப்படும் தேசிய அமைப்புகளுக்கு ஆரம்பத்தில் அவரது இரட்டை குடியுரிமை நினைவுக்கு வரவில்லை” என மகிந்த பத்திரன குறிப்பிட்டுள்ளார்.