காணி விடயங்களில் காலதாமதம் வேண்டாம்! வினோ நோகராதலிங்கம்

Report Print Theesan in அரசியல்
60Shares

காணி தொடர்பான விடயங்களில் காலதாமதத்தினை ஏற்படுத்தாத வகையில் பிரதேச செயலகங்கள் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணி தொடர்பான விசேட வர்த்தமானி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவ்வாறான காணிகளிற்கு இயலுமானவரையில் அனுமதி பத்திரங்களை வழங்கி காலதாமதத்தினை ஏற்படுத்தாத வகையில் பிரதேச செயலகங்கள் செயற்பட வேண்டும்.

சில பிரச்சினைகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அல்லது திணைக்களங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகளால் தீர்க்க முடியவில்லை எனவே அதனை தீர்த்து தாருங்கள் என்று கூறி பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், அரசியல்வாதிகளிடமும் வருகின்றனர்.

இவ்வாறான பல பிரச்சினைகளை திணைக்கள மட்டத்திலேயே தீர்த்து வைக்க முடியும். எனவே அவற்றை இயலுமான வரையில் தீர்த்துவையுங்கள். நாங்கள் அந்த விடயங்களில் தலையிடுவது பொருத்தமற்ற விடயமாகவே இருக்கும்.

அப்படியான விடயங்கள் எங்களிடம் வரும்போது வீணான பிரச்சனைகளை உருவாக்கும் என்று எமக்கு நன்கு தெரியும். அத்துடன் அந்த பிரச்சனையை தீர்க்கமுடியாது விடில் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை உயர் அதிகாரிகள் சொல்லவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.