20 வரைவில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராம்!

Report Print Rakesh in அரசியல்
59Shares

அரசமைப்பின் 20 ஆவது திருத்த வரைவில் பொருத்தமற்றவை எனக் கருதப்படும் விடயங்களை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் மூலம் மாற்ற அரசு தயாராக இருக்கின்றது என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசமைப்பின் 20வது திருத்தத்தை ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றியே அரசு முன்னெடுக்கும். நாட்டின் ஜனநாயக கட்டமைப்புக்கமைய '20' தொடர்பில் கருத்துக்களை வெளியிட எவருக்கும் உரிமையுண்டு.

ஜனாதிபதியின் கொள்கையின் அடிப்படையிலேயே 19 ஆவது திருத்தச் சட்டத்தைத் திருத்தும் 20 ஆவது திருத்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். அதன்பிரகாரம் அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.