அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்
61Shares

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவின் கையடக்க தொலைபேசியை தம்மிடம் கையளிக்குமாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான பதிவுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.

அவை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கையடக்க தொலைபேசியை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.