மஹிந்தவுக்கு உள்ளடக்கம் தெரியாது அதனாலேயே சிறப்புக் குழு நியமனம்! சஜித் அணி

Report Print Rakesh in அரசியல்
61Shares

அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவு குறித்து ஆராய்வதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறப்புக் குழுவொன்றை அமைத்துள்ளமை முன்வைக்கப்பட்டுள்ள வரைவில் என்ன உள்ளது என்பது பிரதமருக்கே தெரியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு தனிநபரை அடிப்படையாகக் கொண்டதாக அரசமைப்பு திருத்தத்தையோ அல்லது புதிய அரசமைப்பையோ உருவாக்க முடியாது.

இதை மீறி அரசு செயற்பட்டால் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும்.

ஜனாதிபதி செயலகத்தையும் பிரதமர் அலுவலகத்தையும் கணக்காய்வுக் குழுவின் கண்காணிப்பிலிருந்து அகற்றும் யோசனை 20ஆவது திருத்த வரைவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவு குறித்து ஆராய்வதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறப்புக் குழுவொன்றை அமைத்துள்ளார்.

இது முன்வைக்கப்பட்டுள்ள வரைவில் என்ன உள்ளது என்பது பிரதமருக்கே தெரியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது கவலையளிக்கும் நிலைமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.