இந்தியத் தூதுவருடன் சுரேன் ராகவன் பேச்சு!

Report Print Rakesh in அரசியல்
172Shares

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பால்கேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த கால செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.