20 இற்கு எதிராக நீதிமன்றை நாடுமா ஐக்கிய மக்கள் சக்தி? இவ்வாரம் முடிவு என்கிறார் ஹரின் பெர்னாண்டோ எம்.பி

Report Print Rakesh in அரசியல்
59Shares

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வதா என்பது குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கட்சியின் சட்டக் குழுவொன்று இது குறித்து ஆராய்ந்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

20ஆவது திருத்த வரைவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதா என்பது தொடர்பில் எங்கள் சட்டக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். இது குறித்து கட்சியின் நாடாளுமன்ற குழுவும் ஆராயும்.

எனினும், 20 இற்கு எதிராக நீதித்துறையிடம் செல்வதே ஒரே வழியாகக் காணப்படுகின்றது. அதேவேளை, ஏனைய சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.