தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்

Report Print Gokulan Gokulan in அரசியல்
441Shares

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி விலகி இருக்கக் கூடிய காரணத்தால் அப்பதவிக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒருவரை தெரிவு செய்வதற்கு எமது முழுமையான ஆதரவு இருக்கும் என தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் கொழும்பு கிளையின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

நிர்வாகத்திறமை மற்றும் மொழி ஆளுமை உள்ள ஒருவரை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

தமிழரசுக்கட்சியின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கும் மிகச்சிறந்த உதாரணமாக கட்சியின் துணைத்தலைவர் திரு சி.வி கே. சிவஞானத்தினால் நேற்று ஊடக செவ்வியல் தெரிவிக்கப்பட்ட கருத்தை நான் கருதுகிறேன்.

கட்சியின் செயலாளர் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அவரது கருத்தை தற்போதைய நிலையில் சாலச் சிறந்த கருத்தாகும்.

கட்சியின் நலனில் வளர்ச்சியில் ஒற்றுமையில் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரான சிவஞானத்தின் பங்களிப்பு எப்போதுமே உண்டு என்பது இந்தக் கருத்தின் மூலம் மிகத் தெளிவாக தெரிகின்றது கட்சியின் துணைத் தலைவரின் இந்த கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.