தங்குமிட விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்
642Shares

பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகள் தமது நடவடிக்கைகளுக்காக கொழும்பை சூழவுள்ள தங்குமிட விடுதிகளை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதனால், இப்படியான குற்றவாளிகளுக்கு விடுதிகளில் தங்க இடமளிக்கக் கூடாது என விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களை கொழும்பில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திற்கு அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதிகளுக்கு வரும் நபர்களை அடையாளம் காண பாதுகாப்பு கெமராக்களை பயன்படுத்தல், ஊழியர்களின் சம்பந்தமான அறிக்கை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாது தொழிநுட்ப உபகரணங்களை பயன்படுத்தும் முக்கியத்துவம் தொடர்பாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை தவிர எந்த நபராவது பாதாள உலகக்குழுக்கள் மற்றும் போதைப் பொருள் விற்பனை போன்ற செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களின் அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.