ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவான் தெரிவு - ஜனவரி கட்சியின் தலைவராகும் வாய்ப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்க, ருவான் விஜேவர்தனவுடன் பிரதித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

வாக்கெடுப்பின் போது ருவான் விஜேவர்தனவுக்கு 28 வாக்குகளும் ரவி கருணாநாயக்கவுக்கு 10 வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ருவான் விஜேவர்தன எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அந்த கட்சியின் தலைவராக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.

ருவான் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.