நாடாளுமன்ற விவகாரங்களின் போது சுயாதீனமாக செயற்பட தமது கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் யு.ரி.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர் பீடம் கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும் 20வது திருத்தச் சட்டம் திருத்தங்களுடன் மீண்டும் சமர்பிக்கப்பட்ட பின்னர் அது குறித்து கலந்துரையாடப்படும் எனவும் அன்வர் குறிப்பிட்டுள்ளார்.