இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என்று கூறி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மாத்தறையைச் சேர்ந்த ஒரு துறவி ஆகியோர் அளித்த முறைப்பாட்டுக்கு இணங்க காவல்துறை விசாரணை இன்று மேற்கொள்ளப்பட்டது.
மாத்தறை காவல்துறைக்கு வரவழைக்கப்பட்ட மங்கள சமரவீரவிடம் காவல்துறையினர் சுமார் 1 மணித்தியாலம் 45 நிமிடங்களாக வாக்குமூலத்தை பதிவுசெய்தனர்.
மங்கள சமரவீரவின் இந்தக்கருத்து ஏற்கனவே பௌத்த கடும்போக்குவாதிகள் மத்தியில் இருந்து பலத்த விமர்சனங்களை கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.