ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க 2021ம் ஜனவரி வரைக்கும் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனவரியில் நியமிக்கப்படவுள்ள கட்சியின் புதிய தலைவர் தொடர்பில் கட்சி விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
முன்னதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான ருவன் விஜேவர்த்தன மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பிரதிதலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது ருவன் விஜேயவர்த்தன கட்சியின் பிரதி தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்