பிரதமர் மஹிந்த ராஜபக்ச நியமித்த குழு கூடி ஆய்வு!

Report Print Murali Murali in அரசியல்

அரசியலமைப்பின் 20வது திருத்தம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்த குழு, குழுவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் கூடியது.

உத்தேச புதிய அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்தம் 12ம் திகதி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்தார்.

அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

அமைசர்களான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நிமல் சிறிபாலா டி சில்வா, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வியழேந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், குழுவின் பரிந்துரைகள் நாளை பிரதமருக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.