கட்சியின் தலைமை பதவிக்கு வருவதே எனது நோக்கம்! ருவான் விஜேவர்தன

Report Print Murali Murali in அரசியல்
107Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, எதிர்காலத்தில் கட்சித் தலைமை பதவிக்கு போட்டியிட போவதாக கூறியுள்ளார்.

“நான் எதிர்காலத்தில் கட்சி தலைமை பதவிக்கு போட்டியிடுவேன். கட்சி தற்போதைய தலைமையுடன் சில மாதங்கள் தொடரும், அதன் பின்னர் ஒரு புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

"இப்போது எனது ஒரே நோக்கம் கட்சியை மறுசீரமைத்து, கடந்த காலத்தில் கொண்டிருந்த பெருமைகளை மீண்டும் கொண்டு வருவதாகும். நான் நாட்டின் அனைத்து பகுதிக்கும் பயணித்து கட்சியை மறுசீரமைப்பேன்,

புதிய பதவிக்கு தன்னைத் தெரிவுசெய்த கட்சித் தலைமை மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

"பதவி நிலையை தீர்மானிக்க செயற்குழு உறுப்பினர்களிடையே ஒரு நல்ல விவாதம் இருந்தது, இறுதியில் வாக்களிக்க முடிவு செய்யப்பட்டது.

ஒரு இரகசிய வாக்குப்பதிவு இருந்தது, எல்லாமே சுமுகமாக இறுதி செய்யப்பட்டது. சக போட்டியாளர் ரவி கருணநாயக்கவுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,

கட்சியை பெரும் உயரத்திற்கு கொண்டு செல்ல அவருடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்ப்பார்த்திருக்கின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.